வினைத்திறன் வாய்ந்த புதிய தலைமுறை புரோசசரை அறிமுகம் செய்யும் இன்டெல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கணினியின் மூளை எனப்படும் புரோசசர்களை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைப்பு செய்து அறிமுகம் செய்கின்றன.

எனினும் இன்டெல் நிறுவனத்தின் புரோசசர்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிறுவனம் இறுதியாக Core i7 எனும் உயர் திறன்கொண்ட புரோசசரை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது 9வது தலைமுறை புரோசசரை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப் புரோசசரானது 8 Core உடையதாக காணப்படுகின்றது.

அத்துடன் Core i9-9900K எனும் தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் முதன் முறையாக 16MB கொள்ளளவுடைய மூன்றாம் நிலை பதுக்கு நினைவகம் (L3 Cache Memory) உள்ளடக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 1ம் திகதி இப் புதிய புரோசசர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers