musical.ly பயன்பாட்டாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்
73Shares
73Shares
ibctamil.com

உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த ஆப்ஸ்களில் ஒன்று தான் இந்த musical.ly. இந்த ஆப்ளிகேசனை நிறுத்தி புதிய செயலிக்கு மாற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை பயன்படுத்தாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் musical.ly செயலி மூடப்படுவதாகவும் இதன் பயனர்கள், தரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் musical.ly செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி, அதன் பயனர்கள் டிக்டாக் வேறு ஒரு சேவைக்கு அதாவது musical.ly போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி மாற்றப்பட்டுள்ளது.

இந்த டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த டிக்டாக் செயலியில் musical.ly போல் அல்லாது சற்று வித்தியாசமாக ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும் மற்றும் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் musical.ly தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்