வளையும் தன்மை கொண்ட சோலார் கலங்கள் வடிவமைப்பு: பயன்பாட்டுக்கு வரும் புதிய கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்கு சூரியக் கலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மீள்தன்மை அற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதனால் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருக்கும்.

இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் வளையும் தன்மை கொண்ட சூரியக் கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Solar Scroll எனப்படும் இச் சூரியக் கலத்தினை மின்கலங்களுக்குள் சுருட்டி வைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

5 வோல்ற், 2 அம்பியர் அளவில் மின்னை தரக்கூடிய இதன் விலையானது 99 டொலர்கள் ஆகும்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச் சூரியக் கலம் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers