கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ஐரோப்பிய கூட்டமைப்பு: எத்தனை கோடிகள் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய தொழிநுட்பம்

ஆன்ட்ராய்டு போன்களில் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 35 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி இணையத்தளங்களுள் ஒன்றாக செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம், ஆண்டிராய்டு போன்களில் கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியுள்ளது.

இதில் தனது ஆதிக்கத்தினை செலுத்திடும் வகையில், வரம்புகளை மீறி செயல்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.

சாம்சங், ஹவாய் போன்ற ஆன்ட்ராய்டு செல்போன்களில் விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி, முன்கூட்டியே கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை நிறுவியுள்ளது.

இதன்மூலம் தனது போட்டியாளர்களை கூகுள் நிறுவனம் ஒடுக்கியதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில், விதிகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 5100 கோடி அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டதோடு, 90 நாடகளுக்குள் சட்டவிரோதமான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்