டிஜிட்டல் உலகின் அடுத்த புரட்சி: உடலில் பயோசிப் பொருத்திக் கொண்ட ஸ்வீடன் மக்கள்

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்
284Shares
284Shares
lankasrimarket.com

ஸ்வீடன் நாட்டில் உள்ள மக்களில் 3,500 பேர் தங்களது உடலில் Bio Chip பொருத்திக் கொண்டுள்ளனர்.

Bio Chip என்பது Sim card போன்று இருக்கும் மிகச் சிறிய எலக்ட்ரானிக் பொருள் ஆகும். இதனை உடலின் எந்த பகுதியிலும் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் நமக்கு நம்முடைய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். அதே போல் டிக்கெட், கடவுச்சீட்டு போன்ற விடயங்களுக்கும் இதனை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தங்கள் பணியாளர்கள் எல்லோரும் கைகளில் Bio Chip பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்ட பணியாளர்கள் தாமாக முன்வந்து தங்களது கைகளில் Bio Chip-யை பொருத்திக் கொண்டனர்.

இதற்காக மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பணியாளர்களின் கைகளில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மருத்துவர்கள் Bio Chip-யை பொருத்தினர்.

இதனை எப்போது வேண்டுமானாலும் உடலில் இருந்து நீக்கிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Bio Chip-யில் தனிநபர் ஒருவரின் அனைத்து விதமான தகவல்களும் அடங்கியிருக்கும்.

இதனை ஸ்வீடன் நாட்டில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும். தற்போது ஸ்வீடனில் 3,500 பேர் இந்த Bio Chip-யை உடலில் பொருத்திக் கொண்டிருப்பதனால், உலகிலேயே அதிகமான மக்கள் இதனை பொருத்திக் கொண்ட நாடு ஸ்வீடனாக உள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்