பற்றரியை சேமிக்கும் வகையில் தொலைபேசியை சார்ச் செய்வது எவ்வாறு?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பொதுவாக அனைவரும் பற்றரி தொடர்பில் கவலை கொள்வதுண்டு, காரணம் பெரும்பாலும் அவை 1 நாளுக்கு மேல் நீடிப்பதில்லை.

ஆனால் இது நம்முடைய தவறாகத்தான் இருக்க முடியம், தவறான முறையில் சார்ச் பண்ணுவதால்.

நீங்கள் வருத்தமின்றி ஒருநாள் முழுவதும் பற்றரி பாவனைசெய்ய வேண்டுமா? இந்த நடைமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

முழுமையாக சார்ச் செய்ததும் இணைப்பை துண்டியுங்கள்

பற்றரி 100 வீதத்தினை அடைந்த பின்னும் தொடர்ந்து சார்ச் செய்வதால் நீண்ட காலத்தில் அது செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இது அதனுளுள்ள இரசாயனங்களில் ஏற்படும் அழுத்தங்களாலாகும்.

100 வீதம் வரை பட்டரியை சார்ச் செய்யாதீர்கள்

காரணம் உயர் அழுத்தங்கள் பற்றரியின் பாவனைக் காலத்தைக் குறைவடையச் செய்கிறது.

கட்டம் கட்டமாக சார்ச் செய்யுங்கள்

பற்றரியை தொடர்ந்து ஒரு கட்டமாக சார்ச் செய்யாதீர்கள். ஒரு நாளில் முடிந்தவரை கட்டம் கட்டமாக பல தடலை சார்ச் செய்யுங்கள்.

குளிரான இடங்களில் பாதுகாத்து வையுங்கள்

ஸ்மார்ட்போன் பட்டரிகள் வெப்பத்திற்கு உணர்திறனுடையவை. சார்ச் செய்யும் போது வெப்பமானால் அதை துண்டியுங்கள். சூடான சூரிய ஒளியில் படாத வண்ணம் பாதுகாத்து கொள்ளுங்கள். இது உங்கள் பட்டரியின் பாவனைக் காலத்தினை அதிகரிக்கிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers