அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் விரைவில் அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் கைப்பேசிகளுக்காக விரைவில் குரோம் உலாவியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

இப் புதிய பதிப்பில் அட்டகாசமான வசதி ஒன்றினை உட்புகுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி பயனர்கள் இணையச் செய்திகளை Offline இல் உள்ளபோதும் படிக்கக்கூடிய வகையில் அவற்றினை தானாகவே சேமித்து வைக்கக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படள்ளது.

இப் புதிய பதிப்பானது இந்தியா, இந்தோனேசியா, பிரேஸில் உட்பட நூறிற்கும் அதிகமான நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனர்கள் வசிக்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல்யமான செய்திகளையும் காண்பிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers