பயனர் தகவல்களை பெறுவதற்காக Huawei நிறுவனத்திற்கு விசேட அனுமதி வழங்கிய பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
36Shares
36Shares
ibctamil.com

பேஸ்புக்கின் அனுமதியின்றியும், பயனர்களின் அனுமதியின்றியும் அவர்களின் தகவல்களை ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் அண்மையில் பாரிய சர்ச்சை வெடித்திருந்தது.

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சீனாவின் பிரம்மாண்டமான தொலைத்தொடர்பு மற்றும் கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Huawei நிறுவனத்திற்கு பயனர்களின் தகவல்களை பெறுவதற்கு பேஸ்புக் நிறுவனம் விசேட அனுமதி வழங்கியுள்ளமையாகும்.

இது தொடர்பில் கடந்த செவ்வாய் கிழமை நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசேட அனுமதியானது 2010ம் ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று Lenovo, Oppo மற்றும் TCL நிறுவனங்களுக்கும் இவ்வாறானதொரு சலுகையை பேஸ்புக் நிறுவனம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் Huawei நிறுவனத்திற்கு வழங்கிய இச் சலுகையினை இந்த வார இறுதியுடன் நிறுத்துவதற்கு பேஸ்புக் தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்