யூடியூப் தளத்தின் இமாலய சாதனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
86Shares
86Shares
ibctamil.com

உலகளவில் காணப்படும் ஒட்டுமொத்த இணையத்தளங்களின் அலெக்ஸ்சா தரவரிசைப்பட்டியலில் கூகுளிற்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் யூடியூப் காணப்படுகின்றது.

அந்த அளவிற்கு அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இதில் பதிவு செய்யப்பட்ட பயனர்களும் உள்ளடங்கும், அதாவது யூடியூப் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளடக்கம்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பயனர்களில் மாதம் தோறும் 1.8 பில்லியன் பயனர்கள் யூடியூப் தளத்தினை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யூடியூப் தளத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Susan Wojcicki தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2017ம் ஆண்டின் நடுப்பகுதியில் 1.5 பில்லியனாக காணப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்