ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம் பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
68Shares
68Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசிகளைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கைக் கடிகாரங்களையும் அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

உலகளவில் பாரிய வரவேற்பினைக் கொண்டிருக்கும் இக் கடிகாரங்களுக்கென பிரத்தியேக இயங்குதளத்தினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

WatchOS எனும் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான WatchOS 5 ஆனது தற்போது வெளியிடப்படவுள்ளது.

எனினும் இவ் இயங்குதளத்தில் முன்னைய இயங்குதளங்களில் செயற்பட்ட அப்பிளிக்கேஷன்கள் பெரும்பாலும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆகும்.

எனினும் இவ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன்களின் புதிய பதிப்பும் வெளிவரும் எனவும் இதற்கு சில காலம் எடுக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்