தேனி ரோபோக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சியில் நாசா

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
35Shares

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிப்பதற்கு முன்னர் அதனை ஆய்வு செய்வதற்கு கியூரியோசிட்டி ரோவர் போன்ற ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேலும் விஸ்தரிப்பதற்காக தேனீக்கள் போன்ற ஏராளமான ரோபோக்களையும் அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளது.

இந்த ரோபோக்கள் Marsbees என அழைக்கப்படவுள்ளன.

எவ்வாறெனினும் இவ்வாறான ரோபோக்களை அனுப்புவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவற்றிற்கு குறைந்தளவு சக்தியை வழங்குவதற்காக சிறகுகளில் விசேட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் ஆய்வு செய்யப்படடு வருகின்றது.

இதற்காக ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகள் குழு தனித்தனியாக பாடுபட்டு வருகின்றது.

இதில் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றும் குழுவிற்கு 125,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்