கூகுளின் Gboard அப்பிளிக்கேஷனில் மேலும் பல புதிய மொழிகள் இணைப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
75Shares
75Shares
lankasrimarket.com

Gboard எனப்படுவது கூகுள் அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த ஒரு தட்டச்சு அப்பிளிக்கேஷன் ஆகும்.

இதன் மூலம் பல்வேறு மொழிகளில் தட்டச்சு செய்யக்கூடிய வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது மேலும் 20 இற்கு மேற்பட்ட மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தற்போது 300 இற்கு மேற்பட்ட மொழிகளில் Gboard அப்பிளிக்கேஷனிலல் தட்டச்சு செய்துகொள்ள முடியும்.

எனவே தற்போது உலகளவில் வசிக்கும் மக்கள் தொகையில் 74 சதவீதமானவர்கள் பயன்படுத்தும் மொழிகளை Gboard உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்துவரும் சில நாட்களில் மேலும் பல மொழிகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் iOS சாதனங்களுக்காகவும் விரைவில் Gboard அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்