உலகிலேயே மூன்றாவது இடம்பிடித்த தமிழ்நாடு: எதில் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்

சமூக வலைதளமான யூடியூப் பயன்பாட்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் உலகிலேயே 3வது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் யூடியூப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழர்கள் தான் அதிலும் அதிகளவில் யூடியூபை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், உலகளவில் யூடியூப் பயன்பாட்டில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.

இது குறித்து யூடியூப்பின் இந்திய தலைமை செயல் அதிகாரி சத்ய நாராயணா கூறுகையில், ‘உலகிலேயே தமிழர்கள் அதிகம் யூடியூப் பயன்படுத்துகிறார்கள். தமிழர்களின் யூடியூப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சமையல், பாடல், கொமடி வீடியோக்கள் ஆகியவற்றை தமிழர்கள் அதிகம் பார்க்கின்றனர். மேலும், தமிழர்கள் Upload செய்யும் வீடியோக்கள் அதிகம் வைரல் ஆகின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்