பேஸ்புக் மற்றும் கூகுள் தொடர்பில் தனது புதிய நிலைப்பாட்டினை வெளியிட்டது ஐரோப்பிய ஆணைக்குழு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று உலகளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் தளங்களாக கூகுள், பேஸ்புக் என்பன விளங்குகின்றன.

இவற்றின் ஊடாக பரப்பப்டும் செய்திகள் உடனடியாக அனைவரிடமும் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஐரோப்பிண ஆணைக்குழு இத் தளங்கள் தொடர்பில் புதிய எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளது.

அதாவது தீவிரவாதம் உட்பட ஏனைய சமூக விரோத செயற்பாடுகள் இவற்றினூடாக மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவை தொடர்பாக புகார் அளிக்கப்படும்போது ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

கூகுள் நிறுவனம் செய்தி சேவையை வழங்கிவருகின்ற அதேவேளை, பேஸ்புக் நிறுவனமும் பயனர்களால் பகிரப்படும் செய்திகளை காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்