பூமிக்கு வெளியே உள்ள பல கிரகங்களில் ஏதேனும் சிலவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என்ற ஐயம் விஞ்ஞானிகளிடையே தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
இதனை நியாயப்படுத்தும் வகையில் அவ்வப்போது மர்ம பறக்கும் தட்டுக்கள் தோன்றி மறைகின்றன.
இந்நிலையில் வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து பூமியில் உள்ளவர்களுக்கு ஏதாவது மெசேஜ் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதன்படி அவ்வாறு கிடைக்கு மெசேஜினை படிக்காமல் அழித்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் அனுப்பப்படும் மெசேஜ்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இதுவரை எவ்விதமான ரேடியே சிக்னல்களோ அல்லது வேறு மெசேஜ்களோ வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து பூமியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.