அடுத்த தலைமுறை இணைய தொழில்நுட்பம் தொடர்பாக ஜப்பானின் DoCoMo நிறுவனத்துடன் பாரிய ஒப்பந்தம் ஒன்றினை நோக்கியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் DoCoMo நிறுவனம் அடுத்த தலைமுறை இணைய வலையமைப்பு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு தேவையான உபகரணங்களை வழங்குவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகும் காலப் பகுதியில் வியாபார ரீதியான 5G வலையமைப்பு தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படும் என DoCoMo நிறுவனம் தெரிவித்துள்ளது.