ஸ்டெம் கலங்களை நரம்புக் கலங்களாக மாற்றி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் மருத்துவத் துறையிலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் அரங்கேறி வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக மனித ஸ்டெம் கலங்களில் இருந்து நரம்புக் கலங்களை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் லாஸ் ஏஞ்சல் பலகலைக்கழகம் என்பவற்றின் ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நரம்புக் கலங்கள் இயற்கையான நரம்புக் கலங்களைப் போன்று உணர்ச்சியுடையனவாக இருத்தல் விசேட அம்சமாகும்.

உணர்திறன் குறைந்த மனிதர்களில் இப் புதிய நரம்புக் கலங்களைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்வதன் மூலம் மீண்டும் அவர்களுக்கு உணர்திறனை வரவழைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்