புரொஜெக்டரை உள்ளடக்கியதாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
102Shares
102Shares
ibctamil.com

பல்வேறு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட விசேட கைப்பேசிகளே ஸ்மார்ட் கைப்பேசிகள் எனப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் புரொஜெக்டர் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியதாக Moviephone எனும் புதிய கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, நீடித்து செயற்படக்கூடிய 4000 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 599 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்