கண்களுக்கு பயன்படுத்தும் சொட்டு மருந்து தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
264Shares
264Shares
ibctamil.com

கண்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்கு திரவ நிலையில் காணப்படும் சொட்டு மருந்து வகைகளை பயன்படுத்துவது வழமையாகும்.

இவ்வாறான சொட்டு மருந்து தொடர்பில் ஏற்பட்ட ஓர் அசம்பாவிதத்தினை தொடர்ந்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

64 வயதான நபர் ஒருவர் சொட்டு மருந்திற்கு பதில் தவறுதலாக நகப்பூச்சினை கண்ணினுள் விட்டுள்ளார்.

இதனை அடுத்து அவரது பார்வையில் மங்கல் தன்மை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான குழப்பங்களுக்கு சொட்டு மருந்துகள் அடைக்கப்பட்டு வரும் டியூப்களைப் போன்றே மேலும் சில திரவ பொருட்கள் அடைக்கப்படும் டியூப்களின் வடிவம் இருத்தலாகும்.

சுப்பர்க்ளு எனப்படும் ஒட்டும் பசையும் இவ்வாறான தோற்றம் கொண்ட டியூப்களில் அடைக்கப்பட்டு வருவதனால் எச்சரிக்கையுடன் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண் சொட்டு மருந்து அடைக்கப்படும் டியூப்களின் வடித்தினை மாற்றுமாறும் பிரித்தானிய வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்