2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘மன் கி பாத்’ என்னும் வார்த்தை தான் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
’மன் கி பாத்’ என்பது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி, நாட்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
தூர்தர்ஷன் நேஷனல், தூர்தர்ஷன் நியூஸ் ஆகிய வானொலிகள் இந்நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆண்டு முழுவதும் விமர்சனங்களும், கருத்துக்களும் வெளியாகின்றன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டெக்குகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், ஜி.எஸ்.டி தொடர்பான ஹேஷ்டேக் உள்ளது. மேலும், மும்பை கன மழை, முத்தலாக் விவகாரம், பணமதிப்பு நீக்கம், தூய்மை இந்தியா இயக்கம், ஆதார் தொடர்பான ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் இந்த ஆண்டு ட்ரெண்ட் ஆகியுள்ளன.