உலகில் காணப்படும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் வீடியோ ஹேமும் ஒன்றாகும்.
எனினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல வீடியோ ஹேமிற்கு பலரும் அடிமையாகியுள்ளனர்.
இதனால் நீண்ட நேரம் வீடியோ ஹேம் விளையாடி மரணித்த சம்பவங்களும் உள்ளன.
இக் ஹேமானது சராசரி மனிதர்களின் ஏனைய அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கின்றது.
இதன் காரணமாக அடுத்த வருடம் முதல் வீடியோ ஹேமிற்கு அடிமையாதல் ஒரு நோய் என உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்யவுள்ளது.
இதில் வீடியோ ஹேம் மட்டுமன்றி டிஜிட்டல் ஹேமிங்கும் உள்ளடக்கப்படவுள்ளது.