எலும்பு முறிவுகளுக்கு இந்த மாத்திரைகள் பயன்தராது: ஆய்வில் தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கடந்த சில தசாப்தங்களாக எலும்பு உடைவு, எலும்பு முறிவு என்பவற்றிற்கு விட்டமின் டி மற்றும் கல்சியம் என்பன பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனாலும் இவை எலும்பு உடைவு, எலும்பு முறிவை குணப்படுத்தாது என புதிய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஐம்பது வயதுகளை தாண்டிய சுமார் 50,000 வரையானவர்களின் மருத்துவ அறிக்கைகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது விட்டமின் டி அல்லது கல்சியத்தை தனியாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது இரண்டையும் பயன்படுத்தியவர்கள் எனும் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விட்டமின் டி ஆனது உண்மையில் ஒரு விட்டமின் இல்லை எனவும் அது ஒரு ஹோர்மோன் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹோர்மோன் ஆனது எலும்பு, புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியமான இனப்பெருக்கத்துடன் தொடர்புபட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று விட்டமின் டி மற்றும் கல்சியம் என்பன எலும்புகளை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக பேணுவதற்கு அவசியம் எனவும், ஆனால் இவற்றினால் என்பு உடைவு, முறிவு என்பவற்றினை ஒருபோதும் குணப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்