உயிர் கொல்லும் டெங்கு நோய் தொடர்பில் வெளியான ஆறுதல் அளிக்கும் செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

நுளம்புகளினால் பரப்பப்படும் டெங்கு நோயானது உயிரைக் கொல்லும் அளவிற்கு கொடுமையானது.

இதற்கான சிகிச்சை முறைகள் எதுவும் இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் முற்கூட்டிய பாதுகாப்பு முறைகளே அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது டெங்கு நோய் நிவாரணியானது எதிர்வரும் 2019ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டுவிடும் என்பதாகும்.

இதற்கான ஆராய்ச்சிகள் 2014ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் 2018ம் ஆண்டிற்குள் புதிய நிவாரணி கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

அதன் பின்னர் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்டு 2019ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

எனவே இதன் பின்னர் முழுமையாக டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்