பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக பீர்

Report Print Kabilan in ஏனைய தொழிநுட்பம்
124Shares

வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றும் எரிபொருளாக பீரை, பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுவில் இருக்கும் எத்தனாலை, பியூட்டனாலாக மாற்றினால் அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம். அதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டபோது அது தோல்வியில் முடிந்தது.

ஏனெனில், அவ்வாறு மாற்றுவது கடினமாக இருந்துள்ளது. மேலும், அதை வாகனங்களில் பயன்படுத்திய போது அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பீரில் இந்த சோதனையை விஞ்ஞானிகள் செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியதோடு, அதிக அளவில் Mileage-யையும் கொடுத்தது.

எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர் எரி பொருளாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், எத்தனாலை பியூட்டனாலாக மாற்றுவது மட்டும் கடினமாக உள்ளது.

அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்