மோட்டார் சைக்கிளில் பயணிப்பவரா நீங்கள்? கூகுள் மேப்பில் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வாகனங்களில் பயணிப்பவர்கள் மட்டுமன்றி நடந்து செல்பவர்களும் கூகுள் மேப்பை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை கார், புகையிரதம் மற்றும் நடந்து சென்றடைவதற்கான தூரம் உட்பட பாதை என்பவற்றினை கூகுள் மேப் காட்டக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை அவ்விடத்தினை சென்றடைவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதும் தனித்தனியாக காட்டப்பட்டிருக்கும்.

எனினும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் குறித்த தூரத்தினை சென்றடைவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது தொடர்பான எவ்வித தகவல்களும் காட்டப்பட்டிருக்காது.

உலகில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு இவ் வசதி தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் சில பகுதிகளில் இவ் வசதியின் ஊடாக தேவையான தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...