பல்லாயிரக்கணக்கானவர்களை இணைத்து தனது சேவையை தொடங்கியது கூகுள் பலூன்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அனைத்து வகையான பிரதேசங்களுக்கும் இணைய சேவையை வழங்குவதற்காக லூன் திட்டத்தினை கூகுள் நிறுவனம் ஆரம்பித்தது.

இந்த திட்டமானது பறக்கும் பலூன்களை பயன்படுத்தி இணைய சேவையினை வழங்குவதாகும்.

பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்த கூகுளின் இந்த திட்டத்திற்கு Federal Communications Commission கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கரீபியன் தீவுக் கூட்டங்களுள் ஒன்றாக காணப்படும் Puerto Rico தீவில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்காக அந்நாட்டின் AT&T மற்றும் T-Mobile ஆகிய இரு வலையமைப்புக்களினதும் உதவியை பெற்றுள்ளது கூகுள்.

இத் தீவில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதிலும் அவர்களால் இதுவரை இணைய இணைப்பினையோ அல்லது தொலைபேசி அழைப்புக்களையோ ஏற்படுத்துவதற்கான வசதிகள் இல்லை.

இதனைக் கருத்தில்கொண்டே கூகுள் லூன் திட்டம் அங்கு செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தற்போது 100,000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது ஏறத்தாழ 20 கிலோ மீற்றர்கள் சுற்றளவுக்கு 10Mbps வேகத்தில் குறித்த பலூன் சேவையை வழங்கி வருகின்றது.

விரைவில் இச் சேவை ஏனைய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்