வைத்தியர்களுக்கான தேர்வில் பங்குபற்றி அதிக புள்ளிகளைப் பெற்ற ரோபோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
24Shares

சீனாவில் இவ் வருடம் இடம்பெற்ற வைத்தியர்களுக்கான தேர்வுப் பரீட்சையில் ரோபோ ஒன்றும் பங்குபற்றியுள்ளது.

இப் பரீட்சையில் பங்கு பற்றிய அனைவரையும் விட அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறித்த ரோபோ.

530,000 பங்குபற்றிய இத் தேர்வின் வெட்டுப்புள்ளியாக 360 புள்ளிகள் காணப்பட்டுள்ளது.

எனினும் ரோபோ அதிகபட்சமாக 456 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

குறித்த ரோபோவினை iFlytek எனும் நிறுவனமும் Tsinghua பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

மேலும் ரோபோ பரீட்சையில் பங்குபற்றியபோது அதற்கான இணைய இணைப்பு மற்றும் சிக்னல் பரிமாற்றங்கள் என்பன துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்