பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் Tesla Model S கார்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
70Shares

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் வடிமைப்பு நிறுவனமான Tesla ஆனது Tesla Model S எனும் புதிய காரினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இக் காரினை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அக் காரில் மேற்கொள்ள விரும்பியுள்ளார்.

இதன்படி Zero to 60 Designs எனும் மீள் வடிவமைப்பு செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

பச்சை நிறத்திலிருந்த காரினை சாம்பல் நிறத்திற்கு மாற்றியதுடன் மேலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இச் சாம்பல் நிறமானது Dolphin Gray என அழைக்கப்படுகின்றது.

குறித்த மாற்றத்தின் பின்னர் பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் வடிவத்தில் காணப்படுகின்றது.

தற்போது இதன் பெறுமதியானது 40,000 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

மேலும் இம் மாற்றங்களை செய்வதற்காக சுமார் 6,500 டொலர்கள் செலவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்