மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சீனாவின் புதிய ராக்கெட்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

விண்ணில் செலுத்தப்படும் விண்கலங்கள் ராக்கெட்டுடன் இணைத்தே அனுப்பப்டுகின்றன.

ராக்கெட்டுக்களில் அனேகமானவை மீளவும் பயன்படுத்தப்பட முடியாதவையாகும்.

அரிதாக மேலும் ஒரு சில தடவைகள் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முறையாக அதிக தடவைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராட்கெட்டினை சீனா வடிவமைத்து வருகின்றது.

இதனுடன் 2020ம் ஆண்டு விண்ணில் செலுத்தவுள்ள விண்கலத்தினை இணைத்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த தகவலை China Aerospace Science and Technology Corporation (CASTC) அமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்