NOOK GlowLight eReader பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

PDF கோப்பில் உள்ள புத்தகங்களை மிகவும் இலகுவாக படிப்பதற்காக உருவாக்கப்பட்ட சாதனமே NOOK GlowLight eReader ஆகும்.

தற்போது இதன் மற்றுமொரு புதிய பதிப்பான NOOK GlowLight 3 eReader அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கண்ணிற்கு பாதிப்பு இன்றி படிக்கக்கூடிய வகையில் மங்கலான ஒளியைத் தரக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் PDF கோப்பு வகைகள் மட்டுமே சேமிக்க வேண்டியிருப்பதனால் 2.5 GB சேமிப்பு நினைவகம் மட்டுமே தரப்பட்டுள்ளது.

மேலும் இதில் உள்ள மின்கலமானது ஒரு முறை சார்ஜ் செய்து 50 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதன் விலையானது 120 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers