பிளே ஸ்டோரில் போலி வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் தரப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

எனினும் இவற்றில் போலியான அப்பிளிக்கேஷன்களும் தரப்பட்டு வருகின்றன. இவற்றில் போலியான வாட்ஸ் ஆப் ஆப்பிளிக்கேஷனும் உள்ளடக்கம்.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப்பினால் புதிதாக ஒரு ஆப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் எனும் குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை இதற்கு நிகரான போலியான ஆப்பிளிக்கேஷனும் கூகுள் பிளே ஸ்டோரில் தரப்பட்டிருக்கின்றது.

இதனை மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்வது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள போலியான ஆப்பிளிக்கேஷன்களை கண்டறிவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

உதாரணமாக ஆப்பிளிக்கேஷன் பதிவேற்றம் அல்லது அப்டேட் செய்யப்பட்ட திகதி, தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை என்பவற்றினை பரிசோதிப்பதுடன், விமர்சனங்களை (Reviews) பரீட்சிப்பதன் ஊடாகவும் போலி ஆப்பிளிக்கேஷன்களை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்