இலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்

Report Print Vethu Vethu in ஏனைய தொழிநுட்பம்

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையர் ஒருவர் மோட்டார் வாகனம் ஒன்றை மீண்டும் தயாரித்துள்ளார்.

களுத்துறையில் பிறந்து மாத்தறையில் வாழும் ஆரியரத்ன என்ற பொறியியலாளரே இந்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.

பயோ ஹைபிரிட் ரகத்திற்கு இணையான வாகனம் ஒன்றே அவரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை சைக்கிள் போன்று மிதித்து ஓட்டவும் முடியும். மோட்டரையும் பயன்படுத்திய பயணிக்க முடியும்.

ஆரம்ப நிலையிலுள்ள வாகனத்தை மேலும் சீர்ப்படுத்தினால் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது தனிப்பட்ட தேவைக்காக இந்த வாகனத்தை பொறியியலாளர் தயாரித்துள்ளார். இதனை உடற்பயிற்சி இயந்திரமாகவும், சிறிய மற்றும் தூர பயணங்களுக்கும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இன்றை போக்குவரத்து நெரிசலில் மோட்டார் வாகனம் ஒன்றில் 30 நிமிடம் செலவிட்டு செலலும் தூரத்தை 15 நிமிடங்களில் இதன் வாகனம் மூலம் பயணிக்க முடியும்.

பயன்படுத்த முடியாத பொருட்களை கொண்டு இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. வசதிகள் கிடைத்தால் இதனை மேலும் சிறப்பாக வடிவமைக்க முடியும் என இதனை தயாரித்த பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தானியக்க கியர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் இந்த வாகனம் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்தப்பட்ட பழைய சைக்கிளின் டயர்களே இதற்கு பொருத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாத்திரமே இதற்கு முழுமையாக செலவிடப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிலோ மீற்றர் தூரம் வரை இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். தற்போது 25 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் இந்த வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers