பேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோ அபராதம்

Report Print Deepthi Deepthi in ஏனைய தொழிநுட்பம்

தவறான தகவல்களை அளித்த பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பை கடந்த 2014-ம் ஆண்டில் வாங்கியது.

அப்போது, தவறான தகவல்களை பதிவு செய்து பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கியுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத்திற்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நிறுவனங்கள் இணைப்பு குறித்து நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள் முறையாகவும், மிகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் வழங்கிய பதிலில், ஐரோப்பிய யூனியனுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பேஸ்புக் வழங்கியுள்ளது.

எனினும் சில தவறுகள் ஏற்பட்டது உண்மை தான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments