இணையதளத்தில் பிரபலமான LG G6 மொபைல் வீடியோ!

Report Print Meenakshi in ஏனைய தொழிநுட்பம்

பிரபல LG நிறுவனமானது LG G6 மொபைல்போனின் உறுதி தன்மை வீடியோவினை வெளியிட்டுள்ளது.

LG நிறுவனமானது சமீபத்தில் வெளியிட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போனான G6 அதிகார பூர்வமாக மொபைலின் உறுதி தன்மையினை கூறும் வீடியோவினை வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் பல்வேறு LG G6 மொபைல் போனானது பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு நிறங்களின் சிறப்பம்சங்களை விளக்கும் இந்த இரண்டறை நிமிட வீடியோவில் ஸ்மார்ட் போன் நீரில் விழுவது, அதிக வெப்பத்தினை தாங்குவது, பேட்டரி ஆப்ஷன் மற்றும் கேமரா திறன் உள்ளிட்டவைகள் விளக்கப்பட்டுள்ளது.

வாட்டர் ஃப்ரூப் (Water Proof) மற்றும் டஸ்ட் ஃப்ரூப்பினை (Dust Proof) கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ள இந்த LG G6 ஸ்மார்ட் போனானது கீழே விழுந்தாலும் அதிகப்படியான கீறல்கள் ஏற்படாதாவாறு வளைந்த டிஸ்பிளேயினை கொண்டுள்ளது.

வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட் போனின் விற்பனை துவங்கும் என கூறி இருந்தாலும் சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments