Netflix UHD ஒளிபரப்பினைப் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

Netflix ஆனது தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஒன்லைன் ஊடாக வழங்கி வரும் முன்னணி இணையத்தளமாக விளங்குகின்றது.

பல மொழிகளில் வழங்கப்படும் இதன் சேவையை உலகின் பல பாகங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் பெற்று வருகின்றனர்.

தற்போது UHD எனப்படும் Ultra Hight Definition தொழில்நுட்பத்தினைக் கொண்டு வீடியோக்களும் Netflix தளத்தில் கிடைக்கின்றன.

எனினும் இவ் வீடியோக்கள் சில சாதனங்களில் செயற்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக LG G6 மற்றும் Galaxy S8 ஆகிய மொபைல் சாதனங்களில் இவ் வீடியோக்கள் செயற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு கைப்பேசிகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளாகும்.

இவற்றில் Galaxy S8 ஆனது HDR10 தொழில்நுட்பத்திற்கு மாத்திரம் சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், LG G6 ஆனது Dolby Vision Screen தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே UHD வீடியோக்கள் செயற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments