மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை

Report Print Raju Raju in ஏனைய தொழிநுட்பம்

தமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப திறமையை பார்த்து வியந்து பல முன்னணி நிறுவனங்கள் அவருக்கு வேலை தர போட்டி போடுகின்றன

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனில்குமார், இவர் மனைவி பெட்டா, இவர்களுக்கு ரிஷிகுமார் (14) என்னும் மகன் உள்ளார்.

இவர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே ரிஷிகுமார் தொழிநுட்ப புலியாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கிய, ரோபோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நான்கு அடி உயரமுள்ள இந்த ரோபோவை அவர் 39 ஆயிரம் ரூபாயில் வடிவமைத்துள்ளார்.

பிரத்யோக ஆப்ஸ் மூலம் இதை கட்டுபடுத்தலாம். இந்த ரோபோ, அதன் முன் நிற்பவரின் முகம் பார்த்து அவரை பற்றிய விபரங்களை கூறி வியக்க வைக்கிறது.

இதுமட்டுமில்லாமல், ரிஷிகுமார் ஆண்ட்ராய்டு, ஆப்பிளில் பயன்படுத்தும் மோஷன் டிரேடர் என்னும் ஆப் உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் சிசிடிவியில் பதிவாகும் முகங்களை அவரவர் போனில் பதிவு செய்யவும், கமெகராவை ஆன் செய்யாமல் சென்சார் மூலம் முகங்களை பதிவு செய்யவும் முடியும்.

இதுவரை 72 ஆப்களை உருவாக்கியுள்ள ரிஷிகுமார் அதை பல நிறுவனங்களிடம் விற்றுள்ளார்.

மேலும், 4.3 வோல்ட்டில் செயல்படக் கூடிய வகையில், 'ஜார்விஸ் மினி' என்ற கம்ப்யூட்டர் சி.பி.யு-வை, 50 கிராம் எடையில் உருவாக்கி அசத்தி உள்ளார்

இது குறித்து ரிஷிகுமார் கூறுகையில், இணையம் மூலம் ஆப்கள், ரோபோக்களை உருவாக்க கற்றேன்.

என் படைப்பான ஜார்விஸ் மினி மூலம் மாதம் எனக்கு 2.50 லட்சம் வருமானம் வருகிறது.

அதில் 30 சதவீதத்தை ஆதரவற்றோருக்கு அளிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ரிஷிகுமார் திறமையை பார்த்து பல முன்னனி நிறுவனங்கள் அவரை சி.இ.ஓ வாக தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments