உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சம காலத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் காரணமாக மின்சார உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இதன் காரணமாக பல்வேறு நாடுகள் சோலார் படலங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதை பரிந்துரை செய்து வருகின்றன.

சில நாடுகள் பாரிய அளவில் சூரிய மின்சக்தியினை உற்பத்தி செய்வதில் காலடி பதித்தும் உள்ளன.

இந்நிலையில் உலகிலேயே மிகவும் பெரிய சோலார் மின் சக்தி பண்ணை ஒன்று அவுஸ்திரேலியாவில் நிறுவப்படவுள்ளது.

இங்கு 3.4 மில்லியன் சோலார் கலங்கள் நிறுவப்படவுள்ளதுடன் மின்னை சேமிப்பதற்கு 1.1 மில்லியன் மின்கலங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இத் திட்டம் இவ்வருட இறுதியில் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதன் ஊடாக 330 MegaWatts (MW) மின்சக்திய உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், சுமார் 10,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டமானது சுமார் 4,000 சதுர அடிகள் பரப்பளவில், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments