3700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட்கள் கண்டுபிடிப்பு

Report Print Raju Raju in ஏனைய தொழிநுட்பம்

3700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட்களின் முக்கிய பகுதிகள் கண்டுபிடித்துள்ளதாக எகிப்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

எகிப்தில் பிரமிடுகள் பற்றிய ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடந்து வருகிறது.

தற்போது கெய்ரோவின் தெற்கில் உள்ள இடுகாடு பகுதியில் எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் அடங்கிய பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமிட் 13-ஆம் பாரோனிக் வம்சத்தால் கட்டடப்பட்டதாக நம்பப்படுகிறது.

341 அடி கொண்ட எகிப்தின் முதல் உண்மையான வழவழப்பான பக்கங்களை கொண்ட பிரமிட் இதுவாகும்.

இதை கட்டியவர் 4-ஆம் வம்சத்தை சேர்ந்த மன்னர் ஸ்னேபெரு என்பதும், இதற்கு முன்னதாகவே அவர் 105 மீட்டர் உயரம் கொண்ட பிரமிட் ஒன்றை கட்டியுள்ளார் என்பதும் முக்கிய விடயமாகும்.

ஸ்னேபெருவை தொடர்ந்து அவர் மகன் க்ஹுப்ம் 138 அடி உயரம் கொண்ட பிரமிட்டை கட்டியுள்ளார் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments