அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

புகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இதனை Android மற்றும் iOS மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக Google Photos அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது குறித்த கால இடைவெளியில் மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் புகைப்படங்களை மிக விரைவாக பேக்கப் செய்தல் குறிப்பிடத்தக்கதாகும்.

அது மட்டுமல்லாது விரைவாக பகிர்ந்துகொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

இப்புதிய பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ் ஸ்டோர் என்பவற்றிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments