சோலார் பேனல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
139Shares

மின்சாரத்தினை உருவாக்குவதற்கு என்னதான் பல்வேறு வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உருவாக்கும் முறைக்கே பல நாடுகளும் மாறி வருகின்றன.

இவற்றின் வரிசையில் பிரான்ஸ் நாடும் இணைந்துள்ளது. அதாவது பிரான்ஸ்சின் Normandy எனும் பகுதியில் சோலார் பேனல்களைக் கொண்டு வீதி அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 கிலோமீற்றர்கள் நீளமான இந்த பாதையினை அமைப்பதற்கு 2,880 சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இவ் வீதியானது Wattway என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இவ் வீதியானது தற்போதே பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ள போதிலும் இரு வருடங்களுக்கு முன்னரே இதன் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பித்துவிட்டன.

குறித்த இரண்டு வருடங்களில் நாள்தோறும் 2,000 வாகனங்கள் இப் பாதையினூடு செலுத்தப்பட்டதுடன், எவ்வளவு மின்சக்தி உருவாக்கப்பட முடியும் எனவும் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாள்தோறும் மணிக்கு 767 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஆண்டுக்கு 280 மெகாவாட்ஸ் உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் வீதியை அமைப்பதற்கு 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments