உலகின் அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியாகும் பிரான்ஸ்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையானது மனிதர்களுக்கு மட்டுமின்றி, சூழலுக்கும் தீங்கை விளைவிக்கும் என நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்டிக் உக்கும் தன்மை அற்றதாக காணப்படுகின்றமையாகும்.

இதனால் பிரான்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் கோப்பைகள், கப்கள் உட்பட மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்படவுள்ளது.

இத்தடையானது எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக பெருமளவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் முதலாவது நாடு என்ற பெயரையும் பிரான்ஸ் தனதாக்கிக்கொண்டுள்ளது.

இதேவேளை அங்கு கடந்த ஜுலை மாதம் முதல் பிளாஸ்டிக் சொப்பிங் பேக் பாவனைக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த வருடம் பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அங்கு ஆண்டு தோறும் 4.73 பில்லியன் பிளாஸ்டிக் கோப்பைகளும், 17 பில்லியன் பிளாஸ்டிக் பேக்குகளும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments