இலிதியம் அயன் மின்கலங்கள் வெடித்து சிதறுவதற்கான காரணம் என்ன?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு மின்னை வழங்குவதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவது இலிதியம் அயன் மின்கலங்கள் ஆகும்.

இந்த மின்கலங்கள் சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக சம்சுங் நிறுவனமும் தான் புதிதாக அறிமுகம் செய்திருந்த லட்சக்கணக்கான தனது Galaxy Note 7 ஸ்மார்ட் கைப்பேசிகளை மீளப் பெற்றுள்ளது.

இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக குறித்த கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் வெடித்துச் சிதறுவதற்கான காரணங்ளை அறியும் முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

இதன் முதற் கட்டமாக இலதியம் அயன் மின்கலங்கள் மிக விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவையாக இருப்பதாகவும், இதனால் குறுஞ் சுற்றுக்கள் (Short Circuit) உருவாகி தீப்பற்ற முனைவதால் வெடித்தல் சம்பவங்கள் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இலிதியம் அயன்களுக்கு பதிலாக மாற்று தொழில்நுட்பம் ஒன்றினை பயன்படுத்த வேண்டும் என கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல விரிவுரையாளரான Clare Grey என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments