4 கோடிக்கு ஏலம் விடப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த கார் டயர்கள்

Report Print Basu in ஏனைய தொழிநுட்பம்
4 கோடிக்கு ஏலம் விடப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த கார் டயர்கள்
152Shares

துபாயில் நடந்த ஒரு கண்காட்சியில் Z TYRES என்ற நிறுவனம் தயாரித்த நான்கு கார் டயர்கள் நான்கு கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் ஹர்ஜீவ் கந்தாரியை உரிமையாளராக கொண்டுள்ள Z TYRES நிறுவனம், அபுதாபி அரசரின் புதிய அரண்மனையை வடிவமைத்த குழுவை சேர்ந்த சிறந்த இத்தாலி கலைஞர்களை கொண்டு குறித்த டயரை வடிவமைத்துள்ளது.

24 கேரட் தங்கத்தோடு உலகின் சிறந்த வைரங்கள் கொண்டு இந்த டயர் தயாரிக்கப்பட்டுள்ளதாக Z TYRES நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக உலகின் மிக விலை உயர்ந்த கார் டயர்கள் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த டயர்கள், துபாயில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியல் ஏலம் விடப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நான்கு கோடிக்கு டயர்கள் ஏலம் விடப்பட்டதாகவும், இந்த பணம் முழுவதும் கல்வியை மேம்படுத்த தங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் Z TYRES நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments