கபடியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெல்லியடி மத்தி – இளவாலை கன்னியர் அணிகள்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கப­டித் தொட­ரில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை கன்­னி­யர்­ம­டம் மகா வித்­தி­யா­லய அணி இன்று மோத­வுள்­ளது.

வவு­னியா ஓமந்தை மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

நேற்று நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­தி­யாட்­டத்­தில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து கிளி­நொச்சி சிவ­ந­கர் அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் இறு­தி­வரை இரு அணி­க­ளும் ஒன்­றுக்­கொன்று சளைத்­த­தல்ல என்­பதை நிரூ­பிக்­கும் முக­மாக விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தன.

இருப்­பி­னும் ஆட்ட நேர முடி­வில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி 17:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

இரண்­டா­வது அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இள­வாலை கன்­னி­யர் மடம் மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து பருத்­தித்­துறை வட இந்து மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­திய இள­வாலை கன்­னி­யர் மடம் மகா வித்­தி ­யா­லய அணி 35:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்