வடமாகாண சதுரங்கத்தில் ஹாட்லிக் கல்லூரி சம்பியன்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
33Shares
33Shares
ibctamil.com

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் அங்கமானஇ சதுரங்கப் போட்டியில் ஆண்களுக்கான 17 மற்றும் 20 வயதுப்பிரிவூகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் ஆண்களுக்காக சதுரங்கப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

17 வயதுப்பிரிவூ ஆண்களுக்கான சதுரங்க போட்டியில்இ 28 பாடசாலைகளைச் சேர்ந்த சதுரங்க அணிகள் பங்குபற்றின.

இதில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.

இரண்டாமிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி அணியூம்இ மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியூம் பெற்றுக்கொண்டன.

20 வயதுப்பிரிவூ ஆண்களுக்கான சதுரங்க போட்டியில், 26 பாடசாலைகளைச் சேர்ந்த சதுரங்க அணிகள் பங்குபற்றின.

இதிலும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.

இரண்டாமிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்