வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லேயில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வரணி மகா வித்தியாலய அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 40 பந்துகளில் 13 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் சார்பில் கியூமன் 8, மொனிக் 2 ஓட்டங் களையும், டெனிசன், அஜந்தன், பெனான்ஸன் மூவரும் தலா ஓர் ஓட்டத்தையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வரணி மகா வித்தியாலய அணியால் 6 ஓட்டங்களையே பெறமுடிந்தது.
இதையடுத்து 7 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.
வரணி மகா வித்தியாலய அணியின் சார்பில் தனுசன் அதிகபட்சமாக 2 ஓட்டங்களைப் பெற்றார். கியூமன் சிறந்த வீரராகத் தெரிவானார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்