மாகாண எல்லேயில் புதுக்குளம் ம.வித்தி மூன்றாமிடம்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்லே தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி மூன்­றா­ வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய வவு­னியா புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி 8 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக வினோ­ஜன். திக்­சி­யன் இரு­வ­ரும் தலா 2 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர்.

9 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி­யால் 7 ஓட்­டங்­களை மட்­டுமே பெற­மு­டிந்­தது.

இதை­ய­டுத்து ஓர் ஓட்­டத்­தால் வெற்­றி­பெற்று மூன்­றாம் இடத்­தைத் தன­தாக்­கி­யது வவு­னியா புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்