இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரவ் கங்குலி நெஞ்சி வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரங் கங்குலி, பிசிசிஐயின் தற்போதைய தலைவராக உள்ளார்.

இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கங்குலியின் இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 3 அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை அவருக்கு நடத்தப்பட்டு ஸ்டெண்ட் வைக்கப்பட்ட பின்னர் உடல் நலம் தேறிய கங்குலி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்