விராட் கோஹ்லி - அனுஷ்கா தம்பதிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
371Shares

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமானார், அவரின் பிரசவத்தின் போது உடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோஹ்லி அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து பாதியில் இருந்து வெளியேறி சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை கோஹ்லி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

குழந்தையும், அனுஷ்காவும் நலமுடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்