சச்சின் டெண்டுல்கரின் நண்பர் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளம்பெண் மற்றும் குடும்பத்தார்... பகீர் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
406Shares

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நண்பர் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் கோவையில் இயங்கி வந்த நிறுவனம் கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் நிதி.

இந்த நிறுவனத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சினுடன் ஒன்றாக காரில் போவது, சச்சின் வீட்டில் இருப்பது போன்ற போட்டோக்களை கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் நிதி நிறுவன மேலாளர் தனது அலுவலகத்திலும், ஆன்லைனிலும் வைத்திருந்ததால், அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்த நபர் என்று மக்கள் நம்பினர்.

இதனால் அவரது நிதி நிறுவனத்தின் மீதும், தங்கள் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை திருப்பி தரப்படும் என்று சொன்னதால் பலரும் அதை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

தொடக்கத்தில் சொன்னது மாதிரியே வட்டியை கொடுத்து வந்த நிறுவனம், போகப்போக வட்டி தராததால் மணிகண்டனையும் நிறுவனத்தில் இருந்த பிறரையும் கேட்டபோது சரியான பதில் இல்லை. நேரிலும் அவர்களை பார்க்க முடியாததால் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்துடன் வெளிமாநிலத்திற்கு எஸ்கேப் ஆவதாக வந்த செய்தியை வைத்து கடந்த ஜுலை மாதத்தில் அவர் வீட்டை முற்றுகையிட்டனர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள். பின்னர் பொலிசார் மணிகண்டன் மற்றும் அவர் நண்பர் சஞ்சயை விசாரித்ததில் மோசடி செய்தது உண்மை என்று தெரியவந்ததும் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்த மணிகண்டன் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா மற்றும் சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த 65 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் மனைவி பத்மாவதி, அவரது மகள் சரண்யா இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்